தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதாலும், தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் நாளை முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: