தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது.. தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு : அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை :பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். அண்ணா ஆட்சி காலத்தில் சமூகவியல் பட்டப்படிப்பு பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் அறிவியல் பட்டப்படிப்புகள் தமிழில் கற்பிக்கப்பட்டது. மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ்மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படும். தமிழ் வழி பொறியியல் படிப்புகள் அடுத்த ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. கல்விக்கொள்கை குறித்து அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். தமிழ் மீது அக்கறை உள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். தமிழ் மீது பற்று இருந்தால் இரு மொழி கொள்கையே போதும் என அண்ணாமலை அறிவிக்கட்டும்,’என்றார்.

The post தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது.. தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு : அமைச்சர் பொன்முடி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: