எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை..!!

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளாக கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். ஆனால் எல்லை தாண்டி தங்களது நாட்டுக்குள் தமிழ்நாடு மீனவர்கள் நுழைவதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது என அட்டூழியங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் பலர் சுட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையின் இந்த அத்துமீறல் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படவே இல்லை.

இந்நிலையில், இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 நாட்டிகல் தூரத்தில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீன் பிடிக்க சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகு மற்றும் அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறிதிருகோணமலைக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவுள்ளனர். செல்வகுமார், பொண்ணு ராஜா, இளையராஜா, கணபதி, சாய்சிவா, முகேஷ், அரவிந்த், அழகு ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை..!! appeared first on Dinakaran.

Related Stories: