தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் நீரில் மூழ்கியது: வெள்ளத்தில் சிக்கிய 1,700 பேர் மீட்பு

தாம்பரம்: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கின. குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ காலனி, மூகாம்பிகை நகர், குட்வில் நகர், கண்ணன் அவென்யூ, தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலை, தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை, லட்சுமி நகர், பாரதி நகர், பழைய பெருங்களத்தூர், பழைய ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, ராஜகீழ்ப்பாக்கம், திருமலை நகர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, ராதா நகர், நெமிலிச்சேரி, பல்லாவரம் – குன்றத்துார் சாலை, முடிச்சூர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலருமான ஜான் லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப் சந்திரன், வே.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடனுக்குடன் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழையால் பாதித்த சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுனர்.

The post தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் நீரில் மூழ்கியது: வெள்ளத்தில் சிக்கிய 1,700 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: