சென்னை: மிலாது நபி விடுமுறையை முன்னிட்டு, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய வனவிலங்கு பூங்காவாகும். விடுமுறை நாட்களில் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிவது வாடிக்கை. வழக்கம்போல், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. பூங்கா பூட்டப்பட்டிருக்கும். ஆனால் இன்று மிலாது நபி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளுக்காக உயிரியல் பூங்காவை திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளது.
The post மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் appeared first on Dinakaran.