இன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 175 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in < //www.tnstc.in > மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.