ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அரசு நல திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அரசு நல திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் கல்வி. சமூக மற்றும் பொருளாதார நலனில் மிகவும் அக்கறையுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (06.10.2023) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ மூலம் இம்மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், பழங்குடியினர் நல திட்ட அலுவலர்கள் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர்கள் ஆகியோருடன் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் மாவட்ட வாரியான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான 34 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான நியமன ஆணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் பயன் விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் பணி புரிந்திடுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசுச் செயலர் க.லட்சுமி பிரியா, மற்றும் ஆதிதிராவிடர் நல இயக்குநர் த.ஆனந்த், பழங்குடியினர் நல கலந்துகொண்டனர். இயக்குநர் ச.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள்

 

The post ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அரசு நல திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: