சமூக வலைதளங்களில் மோடியை விமர்சித்த ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை ஆம்ஆத்மி கட்சி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி ஆகியோரது படத்தை வெளியிட்டு,’ பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானிக்காக வேலை செய்கிறார். மக்களுக்காக அல்ல’ என்று குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நவ.10ம் தேதி ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பா.ஜ தேசிய ஊடகப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலுனி, மூத்த தலைவர் ஓம் பதக் ஆகியோர் அடங்கிய பாஜ பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதுதொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரியங்காவுக்கும் நோட்டீஸ் பிரதமர் மோடிக்கு எதிராக உறுதிப்படுத்தப்படாத தகவல் அடிப்படையில் பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post சமூக வலைதளங்களில் மோடியை விமர்சித்த ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: