சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

கோயம்பத்தூர்: கோவை சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா இரு தடுப்பணைகளை கட்டியுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்து வரக்கூடிய சூழலில் தடுப்பணையை அகற்றக்கோரி கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கூ.ராமகிருஷ்ணன் சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டியதற்கும் 50அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் முழு கொள்ளளவிற்கு நீரை தேக்கவிடாமல் கேரள அரசு தடுப்பதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

சிறுவாணி அணையின் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிலையில் கோவையில் இருந்து சிறுவாணி வரை வனப்பகுதியில் உள்ள சாலையையும் கேரள அரசு சீர்செய்யவில்லை என்று தெரிவித்த அவர் கேரள அரசை கண்டித்து வரும் 26ம் தேதி கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பபோவதாக கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

 

The post சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: