தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசு திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடைய துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் Facebook, Instagram, Twitter, Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக பதிவிடப்பட்டு வருகிறது.

மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (வாட்ஸ்அப்) சேனல் ‘‘TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள மேற்கண்ட துலங்கல் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு துலங்கல் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: