* எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளதாக முன்னாள் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
* காயத்தால் அவதிப்பட்டு வரும் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர், எதிர்வரும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
* இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் செப். 18ம் தேதி தொடங்கும் நிலையில், இலங்கையில் செப்.21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* இலங்கை அணியுடன் மான்செஸ்டரில் நடக்கும் முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸ்: இலங்கை 236; இங்கிலாந்து 358 (ஜேமி ஸ்மித் 111, டெஸ்டில் முதல் சதம்). 122 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 3ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்திருந்தது.
* கார் பந்தயம் இன்று தகுதிச்சுற்று
‘சென்னை ஃபார்முலா-4 ரேசிங் சர்க்யூட்’ இரவு நேர தெரு கார் பந்தயத்துக்கான (ஆக.30, 31,செப்.1) தகுதிச் சுற்று, முதல் சுற்று பந்தயங்கள் இன்றும், நாளை 2வது சுற்றும் இருங்காட்டுகோட்டையில் உள்ள மெட்ராஸ் கார் பந்தய அரங்கில் நடைபெற உள்ளன. பிரதான பந்தயம், ஏற்கனவே திட்டமிட்ட கடற்கரை சாலை, சிவானந்தா சாலை, கொடிமர சாலை என தீவுத்திடலைச் சுற்றிலும் 3.5கிமீ நீளத்துக்கு நடைபெறும். இப்போட்டியில் கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி, கொச்சி, கோவா,பெங்களூரு, சென்னை அணிகள் பங்கேற்கின்றன.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.