ஆசிய பாரா விளையாட்டு; டேபிள் டென்னிஸில் சஹானாவுக்கு தங்கம்

துபாய்: இளையோர் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பேபி சஹானா ரவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். துபாயில் இளையோர் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த, 61 வீரர், 38 வீராங்கனைகள் என, மொத்தம் 99 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், கோல்பால், பளுதூக்குதல், நீச்சல், டேக்வான்டோ, டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உட்பட 11 பிரிவு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பேபி சஹானா ரவி, பிலிப்பைன்சின் லே மேரி மாங்கின்சே உடன் மோதினார். இப்போட்டியில் அபாரமாக ஆடிய சஹானா நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவர் பிரிவில் நடந்த பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் விஜய் விஸ்வா டாம்பே, வடகொரிய வீரர் குவாங் நாம் ஸோவை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Related Stories: