திருப்பதி எஸ்பி அலுவலகத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்

*குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பி பேச்சு

திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி கூறினார். திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு எஸ்பி பரமேஸ்வர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களை பெற்று பிரச்னைகளுக்கு சாதகமாக பதிலளித்து ஒவ்வொருவரின் வழக்குகளையும் விசாரித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை விரைந்து தீர்த்து நீதி வழங்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் புகார்களுக்கு பதிலளிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மொத்தம் 53 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் எஸ்பி பரமேஸ்வர் கூறுகையில், ‘மக்கள் குறைதீர்வு ஸ்பந்தனா திட்டத்தின் கீழ் வரும் அனைத்து புகார்களும் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, உரிய காலக்கெடுவுக்குள் புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தொலைதூரத்தில் இருந்து எஸ்.பி.அலுவலகத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அவர்களின் அதிகார எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் அவைகள் ஸ்பந்தனா புகாராகவே கருதப்படும்’ என கூறினார். இதில், கூடுதல் எஸ்பிக்கள் விமலகுமாரி மற்றும் குலசேகர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி எஸ்பி அலுவலகத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: