சிங்கப்பூரில் உள்ள பூங்கா வடிவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா… செம்மொழி பூங்காவுடன் இணைக்க முடிவு!!

சென்னை :சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களின் வடிவத்தில், சென்னை செம்மொழி பூங்கா அருகே கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட உள்ளது.நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் பூங்கா வடிவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது.ஆய்வுக்கு பின் சாத்தியக்கூறு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.செம்மொழி பூங்காவுக்கு எதிரே உள்ள இடத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு பூங்கா உருவாக்கப்பட உள்ளது.செம்மொழி பூங்காவையும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவையும் இணைக்க பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கலாமா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

The post சிங்கப்பூரில் உள்ள பூங்கா வடிவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா… செம்மொழி பூங்காவுடன் இணைக்க முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: