கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மொழிப்போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் என சினிமாவில் பேசும் வசனத்தை போல ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேசி இருக்கிறார். மீண்டும் மொழிப்போருக்கான அவசியம் என்ன இருக்கின்றது? ஒன்றிய அரசு எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவில்லை. தனியார் பள்ளிகளில் பிறமொழிகள் கற்க அனுமதிப்பதை ஏன் அரசு பள்ளிகளுக்கு கொடுக்கவில்லை என கேட்கின்றோம்.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். இந்த முறை வரலாற்றில் இல்லாத அளவில் அதிகமான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள்.இவ்வாறு அவர் கூறினார். வென்றால் மாலை, தோற்றால் பாடை என்று சீமான் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ‘நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சினிமா டைரக்டர். நல்ல வசனம் பேசுவார். நாங்கள் அதை ரசிப்பதுண்டு’ என்று வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
The post சீமான் நல்லா வசனம் பேசுவார்; ரசிப்போம்: சொல்கிறார் வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.
