சென்னை: தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிச.19ம் தேதிக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்.
வாக்குச்சாவடி மையங்களை அதிகரித்தது எப்படி? அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 8 முறை பிரதமர் மோடி தமிழக வந்தும் எதுவும் எடுபடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் 202 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது என்று கூறினார்.
