குடிமனைப்பட்டா கேட்டு 16ம் தேதி முதல்வரிடம் மனு கொடுக்கும் இயக்கம்: பெ.சண்முகம் பேட்டி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நீர்ப்பிடிப்பு பகுதிகளை தவிர்த்து பயன்பாடற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். தனியார் நிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி பட்டா வழங்க புதிய அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம்தேதி காலை 9.30 மணி அளவில் சுவாமி சிவானந்தா சாலையில் ஒரு லட்சம் பேர் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த இயக்கத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், கோயில் நிலங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்கின்றன. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

Related Stories: