சுட்டெரிக்கும் வெயிலால் மேய்ச்சலுக்கு செல்லவில்லை எடை குறைந்ததால் ஆடுகளின் விற்பனை மந்தம்

*வாரச்சந்தையில் வியாபாரிகள் விரக்தி

கே.வி.குப்பம் : சுட்டெரிக்கும் வெயிலால் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச்செல்லவில்லை. இதனால் எடை குறைந்ததால் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தமானது என்று வியாபாரிகள் விரக்தியுடன் தெரிவித்தனர். கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் நேற்று வழக்கம் போல் காலை ஆட்டு சந்தை தொடங்கியது. இங்கு குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், பரதராமி, உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக டெம்போ மற்றும் ஆட்டோக்களில் கொண்டுவரப்படும்.

காலை 6 மணி அளவிலேயே வியாபாரம் களைகட்ட தொடங்கிவிடும். நூறுக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்று தீர்த்துவிடும். நேற்றைய சந்தையில் 9 மணி ஆகியும் வெறும் 100 ஆடுகளே விற்றுள்ளது. கடந்த வாரங்களில் ஆட்டு சந்தைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெற்ற நிலையில் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தை கூடியது. நேற்றைய சந்தையில் வெள்ளாடுகள், மலையாடுகள், செம்மறி ரக ஆடுகள், குட்டி ஆடுகள், காட்டு ரக ஆடுகள், வந்தன. ஆனால் எதிர்பார்த்த ஆடுகள் எண்ணிக்கையில்லை. குறைந்தளவிலேயான ஆடுகளே வந்தன.

நேற்று முன்தினம் தமிழக ஆந்திர எல்லையில் உள்ளிட்ட வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நேற்று சந்தை மிகவும் மந்த நிலையில் இருந்தன.‌
சராசரியாக ஆடுகள் ₹3 ஆயிரம் முதல் ₹7 ஆயிரம் வரையும், ஆட்டுடன்‌ சேர்ந்த குட்டி ஆடுகளை சிலர் ₹10 ஆயிரம் வரை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது வெயிலின் தாக்கம் குறையவில்லை, பயிர்கள் அறுவடை முடிந்ததாலும், மேய்ச்சலுக்காக ஆடுகள் கொண்டுசெல்ல முடியவில்லை.
இதனால் ஆடுகளின் எடை குறைந்த அளவிலேயே இருக்கின்றது. இதனால் ஆடுகள் வாங்க வந்தவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் எடை இல்லாமல் போனதால் வாங்காமலேயே சென்றனர். மேலும் இதே நிலை வருகின்ற வாரங்கள் இருக்கலாம். இன்று நடைபெற்ற சந்தை இந்த ஆண்டின் மிகவும் மோசமான சந்தை என்றனர்.

The post சுட்டெரிக்கும் வெயிலால் மேய்ச்சலுக்கு செல்லவில்லை எடை குறைந்ததால் ஆடுகளின் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: