பள்ளி வேனில் சிக்கி 5 வயது சிறுமி சாவு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சோலைசேரியை சேர்ந்தவர் பெருமாள். இந்திய ராணுவத்தில் மருத்துவ பணியாளராக உள்ளார். மனைவி விஜயசாந்தி. தளவாய்புரம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது 2வது மகள் சாய் ஷிவானி (5), சத்திரப்பட்டி சாலை ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய சாய் ஷிவானி, திடீரென தவறி கீழே விழுந்தார். இதை கவனிக்காத ஓட்டுனர் வேனை இயக்கினார். அப்போது சிறுமியின் மீது வேன் ஏறியதில் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமியை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுனர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

The post பள்ளி வேனில் சிக்கி 5 வயது சிறுமி சாவு appeared first on Dinakaran.

Related Stories: