நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவுகளுக்கு ரூ.78,673 கோடி தேவை: ஒன்றிய அரசு கேட்கிறது

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ரூ.78,673 கோடி கூடுதல் செலவினத்திற்கான துணை மானிய கோரிக்கைகள், மக்களவையின் ஒப்புதலுக்காக நேற்று தாக்கல் செய்யப்பட்டன. 2023-24ம் நிதியாண்டிற்கான 2ம் கட்ட துணை மானியக் கோரிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.10,798 கோடி, உணவு மற்றம் உர மானியத்திற்கு முறையே ரூ.9,231 கோடி மற்றும் ரூ.3,000 கோடி என மொத்தம் ரூ.78,673 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கூடுதல் செலவினம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும், அதில் ரூ.1.21 லட்சம் கோடி சேமிப்பு மற்றும் பிற வருவாய் மூலம் ஈடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.78,673 கோடிக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் அரசின் மொத்த செலவினம் 2022-23ம் ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகரித்து, ரூ.44.90 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

The post நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவுகளுக்கு ரூ.78,673 கோடி தேவை: ஒன்றிய அரசு கேட்கிறது appeared first on Dinakaran.

Related Stories: