பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

சென்னை: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார். குறிப்பாக கார் விபத்திலிருந்து குணமடைந்த பின் 634 நாட்கள் கழித்து ரிசப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் தன்னுடைய 6வது சதத்தை அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் ஒற்றைக் கையில் குருட்டுத்தனமாக சிக்சர்கள் அடிப்பதாக ரிஷப் பண்ட்டை பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு பிறந்தவர் என்று பாராட்டும் அஸ்வின் இது குறித்து பேசியது பின்வருமாறு: “ரிஷப் பண்ட் மீண்டும் சதமடித்தது நல்ல உணர்வை கொடுத்தது. முதல் இன்னிங்சிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும் சிறப்பாக விளையாடும் அவர் எப்படி அவுட்டானார் என்று ரோகித் சர்மாவிடம் 10 முறை கூறியிருப்பேன். இவர் கிரிக்கெட்டுகாகவே செய்யப்பட்டவர்.

ஒவ்வொரு கோணத்திலும் அவர் கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக பிறந்தவரைப் போல் தெரிகிறது. மிகவும் வலுவான அவர் அடிக்கும்போது பந்து தூரமாக செல்கிறது.சில நேரங்களில் அவர் ஒற்றைக் கையில் அடிக்கிறார். அனைவரும் அதைப் பார்த்து அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இருப்பினும் அவரிடம் அந்தளவுக்கு திறன் இருக்கிறது. ரிஷப் பண்ட் அனைத்திற்கும் ஆம் என்று சொல்கிறார். மிகவும் திறமை வாய்ந்த அவர் பந்தை தவிற விடும்போது மீண்டும் இறங்கி வந்து அடிக்கிறார். வங்காளதேச அணிக்கு பீல்டிங் செட்டிங் செய்த அவர் மிகவும் வித்தியாசமான ஜாலியான நபர்” என்று கூறினார்.

The post பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: