ஜனநாயகம் எங்கள் DNA.. ஜனநாயகம் எங்கள் ஆன்மா.. ..8 ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்!!

வாஷிங்டன்: 8 ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் “மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிராக உங்கள் அரசு நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?”, என கேள்வி கேட்கப்பட்டது;

அதற்கு பதில் அளித்த மோடி, “ஜனநாயகம் எங்கள் DNA.. ஜனநாயகம் எங்கள் ஆன்மா.. ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது.. ஜனநாயக நாட்டில் நாங்கள் வாழ்கிறோம்”, எனக்கூறி விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர், “ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாய். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு: சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது. இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன:

பல்வேறு மாநிலங்களில் சுமார் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம். இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்றார்.பிரதமர் மோடி இவ்வாறு பேசியதன் மூலம் 2014ம் ஆண்டுக்கு பிறகு 2ம் முறையாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

The post ஜனநாயகம் எங்கள் DNA.. ஜனநாயகம் எங்கள் ஆன்மா.. ..8 ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்!! appeared first on Dinakaran.

Related Stories: