பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். கட்சி தலைவர் பதவியை அடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியையும் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரதமர், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக், இந்திய தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். பிரிட்டனில் நடந்த தேர்தலில் 411 இடங்களுக்கு மேல் பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பிரிட்டனில் ஆட்சியை தொழிலாளர் கட்சி பிடித்துள்ளது . தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரிஷி சுனக் பேட்டி அளித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கும் கியர் ஸ்டாமருக்கு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளது. மாறாக கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வருவதோடு தேர்தலில் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. இதனால் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நிகழவும், ரிஷி சுனக்கிற்கு பதிலாக கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் தான் பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் (Labour Party) கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி நேற்று ஒரே கட்டமாக பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்படி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வால்ஸ் மற்றும் நார்தன் அயர்லாந்து உள்ளிட்ட இடங்களில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்தது. பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் நடந்தது.

காலை காலை 7 மணிக்கு கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. மேலும் லிபரல் டெமாக்டரட்ஸ் என்ற கட்சி 2 இடங்களிம், ரீஃபார்ம் யுகே என்ற கட்சி 1 இடங்களிலும், ஸ்காட்டிஸ் நேஷனல் கட்சி, பிளேட் சைக்ரு கட்சி, கிரீன் கட்சி ஆகியவை இன்னும் அக்கவுண்ட்டை திறக்காமல் இருந்தன.

காலை 9 மணி நிலவரப்படி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 255 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 45 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. அதேபோல் லிபரல் டெமாக்டரட்ஸ் கட்சி 32 இடங்களிலும், ஆர்இஎஃப், எஸ்என்பி கட்சிகள் தலா 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.

காலை 10 மணி நிலவரப்படி தொழிலாளர் கட்சி தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 359 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் லிபரல் டெமாக்ட்ரட்ஸ் கட்சி 48 இடங்களிலும், எஸ்எஸ் 6 இடங்களிலும் மற்றவர்கள் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளன. இதன்மூலம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழக்கிறது. தொழிலாளர் கட்சி வென்ற நிலையில் அதன் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்.

 

The post பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் appeared first on Dinakaran.

Related Stories: