ராஜஸ்தான்-பஞ்சாப் கிங்ஸ் கவுகாத்தியில் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு?

கவுகாத்தி: 16வது ஐபிஎல் தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 8வது லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் அதிரடியில் மிரட்டுகின்றனர். இவர்களை தவிர தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் மீது பேட்டிங்கில் எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் வலு சேர்க்கின்றனர்.

மறுபுறம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை தோற்கடித்தது. பானுகா ராஜபக்சே , சாம் கர்ரன், சிகந்தர் ராசா, ஷாருக்கான் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், நாதன் எலிஸ், ராகுல் சாஹர் நம்பிக்கை அளிக்கின்றனர். ரபாடாவின் வருகை கூடுதல் பலம். இரு அணிகளும் 2வது வெற்றிக்கு மல்லுக்கட்டும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருஅணிகளும் இதுவரை 24முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10ல் பஞ்சாப், 14ல் ராஜஸ்தான் வென்றுள்ளன.

கவுகாத்தியை மையமாக வைத்து ஐபிஎல். அணி இல்லை என்றாலும், இது ராஜஸ்தான் அணிக்குரிய உள்ளூர் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கும்.

The post ராஜஸ்தான்-பஞ்சாப் கிங்ஸ் கவுகாத்தியில் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: