கும்மிடிப்பூண்டியில் நீதிமன்றம் முன்பு குளம் போல் தேங்கும் மழை நீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சி பகுதியில் உள்ள நீதிமன்றம் முன்பு குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக, கும்மிடிப்பூண்டி – ரெட்டம்பேடு சாலையில் மழை வெள்ளம் குளம் போல தேங்கி கிடக்கிறது.

இதில் குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் முன் தேங்கியுள்ள மழைநீரால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் கும்மிடிப்பூண்டி – ரெட்டம்பேடு சாலையில் இப்படி மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்றம் முன்பு இப்படி மழைநீர் வருடந்தோறும் தேங்கி கிடப்பது வழக்கறிஞர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அங்கு தண்ணீர் குளம்போல் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் வழக்கறிஞர்கள், இதில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

The post கும்மிடிப்பூண்டியில் நீதிமன்றம் முன்பு குளம் போல் தேங்கும் மழை நீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: