காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே கரையை கடக்கிறது!

டெல்லி : வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவானது. இது ஓரிரு நாட்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை வங்கதேசத்தின் கேபுபரா என்ற கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உத்தராகண்ட், சத்தீஸ்கர், பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை மறுநாள் முதல் மீண்டும் மழை படிப்படியாக குறைய தொடங்கும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செமீ மழைப்பதிவாகி உள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே கரையை கடக்கிறது! appeared first on Dinakaran.

Related Stories: