நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், திருச்சி சோழாஸ் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்து எலிமினேட்டர் சுற்றில் மோத உள்ளன.
இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் குவாலிபயரில் சேப்பாக்கம் – திருப்பூர் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்த 8 தொடரிலும் களம் கண்டுள்ள சேப்பாக்கம், இந்த 9வது தொடரில் 7வது முறையாக பிளே ஆப் சுற்றில் களம் காணுகிறது. அந்த அணி, 5 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி 4 முறை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது.
திருப்பூர் அணி 4வது முறையாக, தொடர்ந்து 2வது முறையாக, பிளே ஆப் சுற்றில் களம் காண உள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட பைனலை எட்டிப்பார்க்கவில்லை. அதனால் சாம்பியன் கனவு, கானல் நீராக தொடர்கிறது. இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 6 ஆட்டங்களில் சேப்பாக்கமும், ஒரு ஆட்டத்தில் திருப்பூரும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் ஜூன் 6ம் தேதி நடந்த, இவ்விரு அணிகளும் மோதிய 2வது லீக் ஆட்டத்தில் சேப்பாக்கம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
The post குவாலிபயரில் இன்று சாட்டையை சுழற்றும் சேப்பாக் சளைக்காமல் போராடும் திருப்பூர்: இறுதிக் கட்டத்தில் டிஎன்பிஎல் appeared first on Dinakaran.
