இந்நிலையில், நேற்று முன்தினம் பந்தல்குடி பைபாஸ் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அமர்நாத்தை தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்தை மீட்டனர். மீதமுள்ள பணத்தையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அமர்நாத், விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
The post அஞ்சல் அலுவலகத்தில் ரூ.5 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது appeared first on Dinakaran.
