சோனியா தனது கைப்பட வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனது சாவுக்கு தன்னுடன் பணிபுரிந்த காவலர் ஒருவர்தான் காரணம் என எழுதி வைத்துள்ளார். அந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார், முகலனிடம் புகாரை பெற்று பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிந்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் துப்பு துலங்கியது. கணவர் முகிலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்த சோனியாவுக்கு, சென்னையில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய பட்டாலியன் காவலரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ராஜி(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் நெருங்கி பழகிய நிலையில், அவரால் சில நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டதாம். இதனால் மனஉளைச்சலில் இருந்த சோனியா விரக்தியுடன் வீடு திரும்பிய நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த பட்டாலியன் காவலர் ராஜியை பிடித்து நெல்லிக்குப்பம் அழைத்துவந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியதுபட்டாலியன் காவலர் கைது appeared first on Dinakaran.
