பிரதமர் மோடி இந்தி தெரியாத இத்தாலியர் இல்லை: நடிகை கங்கனா பிரசாரம்

சிம்லா: காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தியை போன்று பிரதமர் மோடி இந்தி பேச தெரியாத இத்தாலியர் இல்லை என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இமாச்சல பிரதேசம், மண்டி மக்களவை தொகுதியில் பாஜ சார்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகின்றார். குல்லு மாவட்டத்தில் உள்ள ஜகத் கானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாஜ வேட்பாளர் கங்கனா, ‘‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை போன்று பிரதமர் மோடி இந்தி தெரியாத இத்தாலியர் கிடையாது. அவர் மண்ணின் மைந்தர், ஏழை குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுபவர். பிரதமர் மோடி நல்லாட்சியின் சின்னம். பிரதமர் மோடிக்கு பஹாரி உட்பட பல்வேறு மொழிகள் தெரியும். ஒரு புறம் மோடியின் நல்லாட்சி, மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் ஊழல். இமாச்சல் மக்கள் பாஜவின் வெற்றியை உறுதி செய்ய மனதில் உறுதிபூண்டுள்ளனர்” என்றார்.

The post பிரதமர் மோடி இந்தி தெரியாத இத்தாலியர் இல்லை: நடிகை கங்கனா பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: