பிகாஸ் சி12ஐ

பிகாஸ் ஆட்டோ நிறுவனம் ஏற்கெனவே பிகாஸ் சி12 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தைப்படுத்தியிருந்தது. இந்நிலையில் பிகாஸ் சி12ஐ என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,26,153 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1500 வாட்ஸ் மோட்டார் மற்றும் 3.2 கிலோவாட் அவர் விஆர்எல்ஏ பேட்டரி இடம் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகம் வரை செல்லலாம். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 135 கி.மீ தூரம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 7 மணி நேரம் வரை ஆகும். பேட்டரியை தனியாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். எக்கோ, ஸ்போர்ட் என இரண்டு வித டிரைவிங் மோட்கள் உள்ளன. 6 வண்ணங்களில் கிடைக்கும்.

The post பிகாஸ் சி12ஐ appeared first on Dinakaran.

Related Stories: