பிஎப் நிதியை ரூ.5 லட்சம் வரை எடுக்க அனுமதி

புதுடெல்லி: பிஎப் நிதியை தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,’ கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானாக பணம் எடுக்கும் (ஆட்டோ-கிளைம்) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ கிளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் தீர்வு காணப்படும். நடப்பு நிதியாண்டான 2025-26-ன் முதல் இரண்டரை மாதங்களில் இபிஎப்ஓ ​76.52 லட்சம் ஆட்டோ-கிளைம் கோரிக்கைகளை தீர்த்து வைத்துள்ளது, இது இதுவரை தீர்க்கப்பட்ட அனைத்து முன்பண கோரிக்கைகளிலும் 70 சதவீதமாகும்’ என்றார்.

The post பிஎப் நிதியை ரூ.5 லட்சம் வரை எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: