கேளம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்போரூர்: கோடை காலத்தையொட்டி திமுக சார்பில், கேளம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கோடை காலத்தையொட்டி தமிழகமெங்கும் திமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கேளம்பாக்கத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார்.

திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தர்பூசணி, மோர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ராஜாராம், ராமகிருஷ்ணன், கருணாகரன், எல்லப்பன், ஜெகன், கேளம்பாக்கம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் தி.க.பாளையம், பிரபு, அசுந்தன், அப்துல் சுக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கேளம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: