திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் முன் போதையில் மட்டையான வாலிபர்

திருப்பூர் : திருப்பூர் காமராஜ் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு, கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் இங்கிருந்து டவுன் பஸ்களும் இயக்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே பாதுகாப்பு பணிக்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் காவலர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் இருந்ததால் ரோந்து பணியாலும், காவலர்கள் பணி நிமித்தமாகவும் வெளியே சென்று இருந்தனர். அப்போது, பஸ் ஸ்டாண்டிற்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையம் என்பதையும் அறியாமல் பூட்டப்பட்ட காவல் நிலைய வாசலில் ஹாயாக கால்களை நீட்டிக்கொண்டு படுத்து தூங்கினார். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த காவலர்கள் போதை வாலிபரை எழுப்பி அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

The post திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் முன் போதையில் மட்டையான வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: