தியாகதுருகம் அருகே மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா

*3,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அணைக்கரை கோட்டாலம் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் அணைக்கு அருகாமையில் உள்ள கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், பள்ளிப்பட்டு, சூளாங்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மணிமுக்தா ஆணையில் மீன் பிடித்து சென்றனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் ஈடுபட்டனர். இதில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வலை விரித்தும், கூடை வைத்தும் மீன்களை பிடித்து சென்றனர். அப்போது அவர்கள் வலையில் கெண்டை மீன், இறால் மீன், விரால் போன்ற மீன்களை ஏராளமாக பிடித்து பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் தூக்கிச் சென்றனர்.

The post தியாகதுருகம் அருகே மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: