ஊட்டி போலீஸ் ஏட்டு காரில் சடலமாக மீட்பு

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (44). இவர் ஊட்டி லவ்டேல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி சபிதா (34) மற்றும் இரு குழந்தைகளுடன் கோவை மாவட்டம் சிறுமுகை ஆலங்கொம்பு வீராசாமி நகர் பகுதியில் வசித்து வந்தார். சபிதா, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சசிக்குமார் நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான காரில் வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காரில் சசிகுமார் இறந்து கிடப்பதாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்..

The post ஊட்டி போலீஸ் ஏட்டு காரில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: