போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் பள்ளிச் சிறுமி லாரியில் அடிபட்டு இறந்த சம்பவத்தில் போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு 17(அ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள உயர்வு தற்காலிக நிறுத்தம் அல்லது பதவி இறக்கம் என இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: