சனாதனத்தை பற்றி பேச ஆளுநருக்கு அருகதை இல்லை: டி.ராஜா தாக்கு

சேலம்: ‘சனாதனத்தை பற்றி பேச ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை’ என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம், கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தான் பிரதமர் என்ற எண்ணத்தில் பேசாமல் பாஜவின் தேர்தல் பிரசார கூட்டமாக அதனை பயன்படுத்திக் கொண்டார். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் கூட்டமாகவே நினைத்து பேசினார்.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பாஜ ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும். இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள், மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அப்பதவியில் அமர்ந்து கொண்டு சனாதனத்தை பற்றி பேச அருகதை இல்லை. தமிழகத்தில் இருந்து ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.

The post சனாதனத்தை பற்றி பேச ஆளுநருக்கு அருகதை இல்லை: டி.ராஜா தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: