அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் பேபியானோ கரவுனாவுடன் மோதினார். இப்போட்டியின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய கரவுனா அதை வெற்றியாக மாற்றத் தவறினார். கடைசியில் டைபிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்க நடந்த போட்டியில் குகேஷ் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம், குகேஷ் 4.5 புள்ளிகள் பெற்று, மற்றொரு இந்திய வீரர் எரிகேசியுடன் சேர்ந்து 4ம் இடத்தில் உள்ளார். கார்ல்சன் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கரவுனா 7 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நகமுரா 5.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.
The post நார்வே செஸ் கரவுனாவை வீழ்த்தி குகேஷ் அசத்தல் appeared first on Dinakaran.
