மும்பை: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 79,322 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 409 புள்ளிகள் சரிந்து 24,099 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாத நிலையில், கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். 3வது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக உள்ளது. மோடி ஆட்சிக்கு மக்கள் 3வது முறையாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி, பட்ஜெட் உரையைத் தொடங்கினார். பின்பு துறை வாரியாக அறிவிப்புகளை அறிவித்து வந்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். எச்.ஏ.எல்., பிஇஎல் பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்ட ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
யூனியன் பட்ஜெட்டுக்கு முன், உள்நாட்டு பங்குச்சந்தையில் கிரீன் மார்க்கில் வர்த்தகம் துவங்கியுள்ளது. மக்களவையில் காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு முன், உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகள் சாதகமாக வர்த்தகம் தோன்றியது. காலை 9.36 மணியளவில் சென்செக்ஸ் 28.52 (0.03%) புள்ளிகள் அதிகரித்து 80,555.17 ஆக இருந்தது.
மறுபுறம், நிஃப்டி 17.41 (0.07%) புள்ளிகள் அதிகரித்து 24,526.65 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து, நிஃப்டி 22550 ஐ கடந்தது, நிதி அமைச்சரின் பட்ஜெட் உரைக்குப் பிறகு, வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்தபோது, நிஃப்டி 24,150 புள்ளிகள் சரிந்தது.
The post நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி appeared first on Dinakaran.