தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கடந்த 31ம் தேதி தீபாவளி நாளன்று ஒரு சவரன் தங்கம் ரூ.59,640 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்கப்பட்டது 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 4ம் தேதியும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் சவரன் ரூ.58,960க்கு விற்பனையானது.

மேலும் கடந்த 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,355க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: