தங்கம் விலையில் தொடர் மாற்றம்; 5 நாளில் சவரன் ரூ800 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தையும் கண்டு வந்தது. தீபாவளி அன்று (அக்ேடாபர் 31ம் தேதி) ஒரு சவரன் தங்கம் ரூ59,640 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ560 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.தொடர்ந்து 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ120 குறைந்து ஒரு சவரன் ரூ58,960க்கும் விற்கப்பட்டது.

3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 4ம் தேதியான நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் சவரன் ரூ58,960க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ரூ7,355க்கும், சவரனுக்கு ரூ120 குறைந்து ஒரு சவரன் ரூ58,840க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ800 வரை குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலையில் தொடர் மாற்றம்; 5 நாளில் சவரன் ரூ800 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: