பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு


மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,098 புள்ளிகள் சரிந்து 78,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 366 புள்ளிகள் சரிந்து 23,955 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்த தங்களது ரூ.94,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதால் சரிவு ஏற்பட்டுள்ளது

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்த தங்களது முதலீட்டை சீன பங்குச்சந்தைக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திருப்பிவிட்டன. பொதுத்துறை வங்கிகள், வாகன நிறுவன பங்குகள், உருக்கு நிறுவன பங்குகள் விலை சரிந்தன. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 7400 புள்ளிகள் சரிந்தது. இந்திய பங்குச்சந்தையில் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. .

The post பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: