நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளுமையான காற்று வீசுவதால் மக்கள் மகிழிச்சியடைந்துள்ளனர்.

சென்னை நகரைப் பொறுத்த வரையில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. ஆடி மாதத்தில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விளைநிலங்களில் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: