×

விரைவில் மேகதாது திட்ட பணி தொடங்கும் - கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தகவல்

ராம்நகர்: மேகதாது திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்ற நிலையில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. ராம்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தகவல் அளித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதலுக்காகவே காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் திட்ட பணிகள் தொடங்கும். மேகதாது திட்ட பணியை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் எடியூரப்பா உறுதியாக உள்ளார் என்று அஸ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.

Tags : Maykratha ,Deputy Chief Minister of Karnataka ,Aswat Narayana , magatatu
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...