×

முள் படுக்கையில் படுத்தபடி பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெண் சாமியார் நாகராணி ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து, மார்கழி 18ம் தேதி முள் படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவது வழக்கம். இதன்படி நாகராணி காப்புக்கட்டி விரதத்தை  துவக்கினார். 48ம் நாளான நேற்று கோயில் வாசலில் 6 அடி உயரம், 10 அடி அகலத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது. முதலில் அவர், கோயில் வளாகத்தில் உள்ள முத்துமாரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் முள் படுக்கைக்கு பூசாரி மாரிமுத்து சுவாமிகள் பூஜை செய்து, பெண் சாமியார் நாகராணி அம்மையாரை முள் படுக்கைக்கு அழைத்து வந்தார். பின்னர் நாகராணி முள் படுக்கையில் சாமியாடியபடி படுத்து, பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். 3 மணி நேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார்.


Tags : preacher , Bless the female preacher to lie on the bed of thorns
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...