×

மேட்டூர் நீர்மட்டம் 97.36 அடியாக சரிவு

 

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 1000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து 1,200 கனஅடியாக சற்று அதிகரித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 44 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 68 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 97.47 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 97.36 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 61.47 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur ,Cauvery ,Hogenakkal Cauvery ,Mettur dam ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...