- விஜய்
- சேகர்
- கோபி?. திருக்குறள்
- சட்டமன்ற உறுப்பினர்
- எஸ்.வி.சேகர்
- கோபி, ஈரோடு மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
கோபி: ஈரோடு மாவட்டம், கோபியில் திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலை பொறுத்த வரை இன்றைய சூழ்நிலையில் மீண்டும் என்னுடைய அருமை நண்பர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தவெக தலைவர் விஜய்யை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் பாஜ, கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வழங்குவதில் தாமதம் செய்கிறதா?.
அடிப்படையான அறிவே இல்லாமல் தான் இந்த ரசிகர் மன்ற கூட்டம் வளர்கிறது. சிபிஐ விசாரணைக்கு சரியான நேரத்துக்கு செல்கிறார். விமானத்திற்கு சரியான நேரத்துக்கு செல்கிறார், எல்லாவற்றிற்கும் சரியான நேரத்தில் செல்லும் விஜய், கரூர் கூட்டத்திற்கும், அரசியல் கூட்டத்திற்கும் தாமதாமாக தான் வருவார் என்றால் அரசியலில் எவ்வளவு தாமதமாக வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்க இவர் எம்ஜிஆரா?
சிபிஐ அலுவலகம் சென்றீர்களே அங்கு கூட்டம் வருகிறதா? பட்டினப்பாக்கம் வீட்டில் இருக்கும் பொழுது கூட்டம் வருகிறதா? உங்களுக்கு தேவை என்றால் கூட்டம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். இல்லை என்றால் நெல்லிக்காய் மூட்டை போன்று ஜனங்களை சிதற விட்டு, 41 பேரை நசுக்க வேண்டியது. தற்குறி கூட்டம் என்று சொன்னால் கோபம் வருகிறதே தவிர, தன்னைவிட தற்குறிகளாக உள்ளவர்களை தனக்கு கீழே வைத்திருக்கிறார். 50 ஆண்டுகாலம் விஜய்யின் வயதை விட அதிகமான அனுபவம் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் கூட விஜய்யை புகழ்கிறார் என்றால் பரிதாபமாக உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது மிகக் கடினம். காரணம் பாஜ என்பது மிகப்பெரிய பாறாங்கல். அதை கட்டிக்கொண்டு யார் வேண்டுமானாலும் தண்ணீரில் குதிக்கலாம். கல்லுக்கு ஒன்றுமே ஆகாது. உலக மகா பொய்யர் என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் அது அண்ணாமலைக்கு தான் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தவெகவில் ஐக்கியம் ஒரே நாளில் 2 கோடி கடனை அடைத்த அதிமுக மாஜி எம்.பி
‘தவெகவிற்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒரே நாளில் 2 கோடி ரூபாய் கடனை அடைத்து விட்டதாக இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதிருப்தியில் உள்ளவர்களை விலைக்கு வாங்க விஜயால் முடிகிறது. ஆனால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது? வரும் தேர்தலில் கோபி தொகுதியில் செங்கோட்டையன் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது கஷ்டம் என்று செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள்’ என்று எஸ்.வி.சேகர் கூறினார்.
