- திருவாவடுதுறை
- நிதி அமைச்சகம்
- திருவிடாய்மராத்தூர்
- தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம்
- சூரியனார் கோயில் அதீனம்
- மகாலிங்க சுவாமிகள்
- குருமகேசன்
- பெங்களூர்
திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சூரியனார் கோயில் ஆதீனம் 14ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன், 28வது குருமகாசந்நிதானமாக இருந்த மகாலிங்க சுவாமிகள் பெங்களூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட விவகாரத்தால் சலசலப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி கிராம மக்கள் வலியுறுத்தியதால், மகாலிங்க தேசிக பராசாரியார் சுவாமிகள் ஆதீனம் நிர்வாக பொறுப்பை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார். அறநிலையத்துறை சார்பில் பட்டீஸ்வரம் செயல் அலுவலர் ஆதீனத்தின் நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் தன்னிடம் ஆதீனம் நிர்வாக பொறுப்பை ஒப்படைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகாலிங்க சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ‘‘ஆதீன மரபை மீறி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்டதால், அவர் தொடர்ந்து ஆதீன குருமகா சந்நிதானமாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே சூரியனார் கோயில் ஆதீனத்தை ஒப்படைக்கக் வேண்டும்’’ என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘‘சூரியனார் கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக மகாலிங்க சுவாமி இருக்க தகுதி இழந்துவிட்டார். ஆதீனத்தின் சாவியை திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசந்நிதானத்திடம் அறநிலையத்துறை ஒப்படைக்க வேண்டும்’’ என்று கடந்த நவம்பர் 28ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி நேற்று பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சாவியை திருவாடுதுறை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினார். இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட அனைத்து அறைகளில் உள்ள பொருட்களை அறநிலையத்துறை அதிகாரிகள் முன் சரிபார்த்து ஆதீன பணியாளர்கள் பெற்று கொண்டனர்.
