×

ஆபாச பட வழக்கில் கைதாவதை தவிர்க்க ராஜ் குந்த்ரா ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்தாரா?….பரபரப்பு தகவல்கள்

மும்பை: ஷில்பா ஷெட்டியின் கணவரான பிரிட்டிஷ் – இந்திய தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தேடப்படும் மற்றொரு முக்கிய குற்றவாளியான அரவிந்த் வஸ்தவா என்ற யாஷ் தாக்குர், கடந்த மார்ச் மாதமே ஊழல் தடுப்பு பிரிவின் இமெயில் முகவரிக்கு ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதில், குந்த்ரா, ஆபாச பட வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க மும்பை குற்றப்பிரிவை சேர்ந்த அதிகாரிக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஊழல் தடுப்பு பிரவினர் மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடந்த ஏப்ரல் மாதமே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆனால், போலீஸ் தரப்பில் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.நடிகை ெஷர்லின் சோப்ரா பகீர் வாக்குமூலம்இந்த விவகாரம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்த ஷெர்லின் சோப்ரா, இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த சில நாட்களாக, பல்வேறு பத்திரிகையாளர்கள் என்னிடம் போனில் தொடர்பு கொண்டும், இ-மெயில் செய்தும் இந்த விவகாரம் குறித்து கேட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் முதன் முதலாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தது நான்தான். மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் அழைத்ததும், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் குறித்துதான் எனக்கு கவலை ஏற்பட்டது. இருப்பினும், எந்த வித தயக்கமும் இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்தேன். ஆபாச பட நிறுவனம் பற்றி கூறினேன். ஒருதலைப்பட்சமாக இல்லாமல், எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன்.நண்பர்களே, இந்த விவகாரத்தில் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இதுபற்றி இங்கு கூறுவது சரியானதாக இருக்காது. மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு நான் கூறிய விவரங்களை அவர்களின் அனுமதியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஷெர்லின் சோப்ரா கூறினார்.சொத்து மதிப்பு ரூ.4,000 கோடிஆபாச பட விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜ் குந்த்ராவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவ்வளவு இருந்தும், வெப் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஆபாச படம் எடுத்ததாகவும், போட்டோ ஷூட் செய்வதாக நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணிய வைத்ததாகவும் வெளியாகும் தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. தற்போதைய மதிப்பின்படி இவரது சொத்து மதிப்பு தோராயமாக சுமார் ரூ.4,000 கோடி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஷில்பாவிடம் விசாரணையா?ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என மும்பை போலீசார் கூறினர்….

The post ஆபாச பட வழக்கில் கைதாவதை தவிர்க்க ராஜ் குந்த்ரா ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்தாரா?….பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Raj Kundra ,Mumbai ,Shilpa Shetty ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் இளைஞரை சித்ரவதை...